24 Sept 2012

ஜலதோஷக் காய்ச்சல் குறைய

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள்:
  • மூக்கிலிருந்து சளி வருதல்.
  • காய்ச்சல்.
  • உடல் வலி.
தேவையான பொருட்கள்:
  1. சுக்கு.
  2. மிளகு.
  3. திப்பிலி.
  4. தாளிசபத்திரி.
  5. தேவதாரு
செய்முறை:
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

கரப்பான் குறைய

பாவட்டை இலை, இலுப்பைப்பட்டை, வெங்காயம், வசம்பு, சிற்றாமணக்கு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சோ்த்து காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வரவேண்டும். இரவில் சிற்றாமணக்கு இலையை வதக்கி புண்கள் மீது வைத்துக்கட்டி காலையில் எடுத்து விட்டு சுட்ட இலுப்பை  அரப்பினால் தேய்த்து கழுவ வேண்டும். பின்பு புண்ணின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வந்தால் தலையில் ஏற்படும் கரப்பான் (கபாலக் கரப்பான்) குறையும்.

அறிகுறிகள்:

  • அரிப்பு.
  • கரப்பான்.
  • புண்கள்.
தேவையான பொருட்கள்:
  1. பாவட்டை இலை.
  2. இலுப்பைப்பட்டை.
  3. வெங்காயம்.
  4. வசம்பு.
  5. சிற்றாமணக்கு எண்ணெய், இலை.
  6. தேங்காய் எண்ணெய்.