20 May 2013

வாய் துர்நாற்றத்தைப் போக்க வழிகள் பத்து!


10 tips to cure Mouth odor  (bad breath)
வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

  1. தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
  2. உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள்
  3. ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
  4. அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

10 tips to cure Mouth odor  (bad breath)

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
10 tips to cure Mouth odor  (bad breath)
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

உடல் "பளபளக்க"அழகு குறிப்புகள்...





இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமே எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத ஆரோக்கியமான உடலழகைப் பெற முடியும்.


தற்காலத்தில் விற்கப்படும் கெமிக்கல் பொருட்கள் கலந்த அழகுப்பொருட்களைப் பயன்படுத்துவதன்

மூலம் சில பக்க விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக சொல்வதெனில் சருத்திற்கு பயன்படுத்தும் அழகு கிரீம்கள், சன்லோஷன்ஸ் போன்றவற்றை சொல்லலாம். விளம்பரங்களில் வரும் அழகு சாதனப்பொருட்களை, அதன் கவர்ச்சிமிகு விளம்பரங்களில் மயங்கி வாங்கிப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது.

அதன் விளைவாக உருவாகும் சரும பாதிப்புகளும் அதிகம்.

இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்களை வைத்தே உடலழகை பளபளக்கச் செய்யலாம்.

முகம் பளபளக்க.. 

உங்கள் முகம் பளபளப்பு பெற சாதாரணமாக நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காரட்டே போதும்.
ஒரு கேரட்டை எடுத்துக்கொண்டு,  அதை நன்றாக கூழ்போல் அரைத்து, உங்கள் முகத்தில்,  அந்த கூழை Facial Cream போல் நன்றாக தடவிக்கொள்ளுங்கள்.

அந்த பசையானது தோலில் நன்கு ஊறிய பிறகு சிறிது நேரம் நன்றாக ஊறவிட்டு முகத்தை கழுவுங்கள். உங்கள் முகம் இப்பொழுது புதுப்பொலிவுடன், வழவழப்புத் தன்மையைப் பெற்றிருக்கும்.

உதடுகள் பளபளக்க..

கருப்பு உதடுகளையும் சிவப்பாக்கும் பீட்ரூட்..

சிலருக்கு உதடுகள் ஒரு மாதிரியாக சொரசொரப்புடன் கரியநிறத்தை கொண்டிருக்கும். அதற்கு நீங்கள் Lipstick பயன்படுத்துவதை விட, இயற்கையான பீட்ரூட் கிழங்கில்  சாறெடுத்து, அந்த சாற்றை உங்கள் உதடுகளின் மீது தடவி வாருங்கள்.. ஒரே வாரத்தில் உங்கள் உதடுகளின் நிறம் மாறி, கொவ்வைச் செவ்விதழைப் பெற்றிருக்கும்.

பாதம் பளபளக்க...

பாதாம் எண்ணெயும் பாதமும்..
பாத்ததின் இறுகிய தன்மையைப் போக்கவும், பார்ப்பதற்கு நல்லதொரு வழவழப்பான தன்மையைப் பெறவும் பாதாம் எண்ணையை உங்கள் பாதங்களில் தடவி வர விரைவில் வாழைத்தண்டு கால் அழகைப் பெறுவீர்கள். பாதமும் நல்ல மென்மையான தோற்றத்தைப் பெறும்.

முழங்கை, முழங்கால் பளபளக்க...

முழங்கால்களில் , முழங்கைகளில் உள்ள கறுப்பு நிறம் என்பது பெரும்பாலானவர்களுக்கு இருக்க கூடியதே.. இந்த முழங்கால், முழங்கையில் உள்ள கருப்பு நிறத்தை போக்க ஆலிவ் எண்ணெயும், பன்னீரும் கலந்த கலவையை தடவி வர.. நாளடைவில் கரிய நிறம் மறைந்து மற்ற இடங்களில் உள்ளதைப்போன்ற தோலின் நிறத்தைப் பெற முடியும்.

தலைமுடி பளபளக்க...

மனிதர்களுக்கு அழகென்று சொன்னாலே அது தலைமுடிதான்.. அழகு நிறைந்தவர்களை மேலும் அழகாக காட்டுவதில் தலைமுடியின் பங்கு அதிகம். அத்தகைய தலைமுடியில் இளநரை, பித்த நரை ஆகியவை இருந்தால் அவற்றைப் போக்க, செம்பருத்தி இலைகள் மூன்றுடன், அதற்குத் தகுந்த சீயக்காய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை தலைக்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறவிட்டு, பின்பு தலையை அலசினால் இளநரையும் இருந்த இடம் இல்லாம் போயிருக்கும்.. தொடர்ச்சியாக இந்த முறையைப் பின்பற்ற இளநரைக்கு நிரந்தரமாக குட்பை சொல்லிவிடலாம்..