6 Feb 2012

நான்கு குவளை தண்ணீர் நோய்களை விரட்டும்


நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழுவழுப்புத் தன்மையை பாதுகாக்கிறது.
தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும் எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
காலையில் கண் விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 குவளை தண்ணீர் அருந்த வேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக்கூடாது 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
தண்ணீர் மருத்துவம்
எந்த நோய்க்கும் எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.உயர் இரத்த அழுத்தம் – 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் – 10 நாட்கள், சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி – 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) – 10 நாட்கள், புற்றுநோய் – 180 நாட்கள், காச நோய் – 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம்முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்து நோய்களும் முற்றிலும் குணமாகும். அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பக்கவிளைவு கிடையாது
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவ முறை இது. எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்தமுறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.
முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 குவளை நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 குவளை அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம். தண்ணீர் குடித்தால் மட்டுமே ‘பக்க விளைவு’ வராது.

0 comments:

Post a Comment