10 Mar 2012

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த


நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

 
நீரிழிவு நோயாளிகள் உடற்பயிற்சி மூலமும் ஓரளவு சர்க்கரை அளவை குறைக்க முடியும். இதற்கு நடை பயிற்சி, யோகா நல்லபலன் தரும். அடிக்கடி டென்ஷன் ஆகும் நபர்கள் என்றால் தியானம் செய்வது நல்லது. யோகாவில் பத்மாசனம், யோகா முத்ராசனம், சர்வாங்காசனம், மத்யாசனம், சக்கராசனம், ஏகபாத ஆசனம் போன்றவை நீரிழிவு நோயை பெருமளவில் கட்டுப்படுத்தும்.
 
நீரிழிவை தடுக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம். கொழுப்பு சத்துள்ள உணவுகளை சாப்பிட கூடாது. எண்ணை பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. ஒவ்வொரு கிராம் கொழுப்புச்சத்தும் 9 கலோரிகள் ஆக்கி விடும். ஒட்டு மொத்த கலோரிகளில் 10 சதவீதம் தான் கொழுப்பு இருக்க வேண்டும்.
 
நீரிழிவு நோயாளிகள் மாதம் ஒரு தடவை ரத்த பரிசோதனை செய்வது நல்லது. ரத்தத்தின் சர்க்கரை அளவுக்கு ஏற்ப நமது உணவு முறையை மாற்றிக் கொள்ள இது உதவும். நீரிழிவு நோய் வந்ததும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உரிய சிகிச்சை எடுப்பது நல்லது

அழகு தரும் ஆயுர்வேதம்


அழகு தரும் ஆயுர்வேதம்

 
* ஜாதிக்காயை பாலில் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பு நிறம் மாறும்.
 
* கடலை மாவு, மஞ்சள் பொடி ஆகியவற்றை தயிரில் கலந்து முகத்தில் தேய்க்க  வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் வெயிலில் ஏற்படும் கருப்பு புள்ளிகள் மறையும்.
 
* பச்சை உருளைக்கிழங்கு சாறு எடுத்து  முகத்தில் பூசி வந்தால்  ஜொலிப்பு கூடும்

கண்களில் கருவளையம் மறைய.....


கண்களில் கருவளையம் மறைய.....

 
* தக்காளி சாறு, எலும்ச்சை சாறு ஆகியவற்றை கலந்து  கண்களை சுற்றி தேய்த்தால் கருவளையம் மறையும்.
 
* நேந்திரம் பழத்தையும் கூழாக்கி அதை கண்களை சுற்றி பூசவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கும்.
 
* கஸ்தூரி மஞ்சள், ரத்த சந்தனம் ஆகியவற்றை சம அளவில் கலந்து தினமும் பூசி வந்தால் கண்களில் கீழே கறுப்பு வளையம் மாறும்.

முடி வளர்ச்சிக்கு இயற்கை மருத்துவம்


முடி வளர்ச்சிக்கு இயற்கை மருத்துவம்

 
* கஞ்சாங்கோரை இலையை நன்கு உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் பேன்கள் தொல்லை குறையும்.  
 
* பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து நன்கு செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.  
 
* செம்பருத்தி பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி முடிக்கு தடவி வந்தால் தலை முடி நன்கு வளரும்.  
 
* அரளிப்பூவை தலையில் வைத்துக்கொண்டால் பேன்கள் தொல்லை குறையும்.
 
* பிஞ்சு ஊமத்தை காயை அரைத்து முடி உதிர்ந்த பகுதியில்  பூசினால் முடி வளரும்

சரும பராமரிப்பு


சரும பராமரிப்பு

 
• ஸ்ட்ரோபெரி பழத்தை பிசைந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடத்தில் அதை எடுத்துவிட்டு, பின்னர் ஆப்பிள் கூழை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட முகச்சுருக்கம் நீங்கி முகம் அழுகு பெறும்.
 
• வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதன் ஆவியை முகத்தில் மூன்று நாட்கள் பிடித்து வர முகத்தில் அழுக்கு நீங்கி முக‌ம் பொலிவு பெறும்.