24 Feb 2012

குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் டயப்பர்


குழந்தைகளின் மென்மையான சருமத்தை பாதிக்கும் டயப்பர்

 
குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்' அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.
 
சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?
 
* டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.
 
* டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 
* குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது.
 
* சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.
 
* டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும். கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.
 
* சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு' கொண்ட ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள்.
 
* வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.

கொளுத்தும் வெயிலிலும் அழகாய் தெரிய டிப்ஸ்


சிறிது தூரம் சென்று வந்தாலே முகம் வாடிப்போய்விடும் எனவே கருமையை மாற்றவும், சருமத்தை பாதுகாக்கவும் அழகியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.
தயிர் கலவை
வெளியில் கிளம்பும் முன்பாக சிறிதளவு தயிரை முகம், கைகளில் தேய்த்து மிதமான சுடுநீரில் அலம்புங்கள். பிறகு, துடைத்துவிட்டு, டால்கம் பவுடரை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் வெயிலின் உக்கிரம் சருமத்தை பாதிக்காது.
கருமை மறையும்
வெயிலில் அலைந்துவிட்டு வந்தவுடன், சோப்பு போட்டு அலம்புவதால், அந்த சில விநாடிகள் மட்டுமே முகம் பளபளப்பாக இருக்கும். ஆனால் நிறம் அப்படியே தான் இருக்கும். சோப்புக்கு பதிலாக
பாசிப் பருப்பு, கடலைப்பருப்பு, பூலான்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள்,வெள்ளரி விதை, வெட்டிவேர் ஆகியவற்றை கலந்து அரைத்த பொடியை பூசி முகம் கழுவலாம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும், இந்த குளியல் பவுடருடன் ஒரு சிட்டிகை முல்தானிமட்டி, எலுமிச்சைசாறு , தேங்காய்ப் பால் சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள கருமை மறைந்து நிறம் கூடும்.
உருளைக் கிழங்கு பவுடர்
தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.
பச்சைக் காய்கறிகள்
உடம்பில் சூடு அதிகமாகும்போது, தோலின் கருமையும் அதிகமாகிவிடும். அதனால் கீரை, பச்சைகாய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மோர், இளநீர், பழச்சாறு இவற்றை அருந்தி உடம்பை எப்போதும் குளுமையாக வைத்துக் கொண்டால், சிகப்பழகு ஓடிவந்து ஒட்டிக் கொள்ளும்.
இரவில் படுக்கப் போகும் முன் தரமான மாய்ஸ்ட்டுரைஸிங் க்ரீம், கோல்டு க்ரீம் ஆகியவற்றை முகத்தில் தடவவேண்டும். காலையில் வெளியே செல்லும் முன் சூரிய வெப்பம் தாக்காதிருக்க சன் டேன்லோஷன் தடவிக் கொள்ளவேண்டும்.
இயற்கை சிகைக்காய் பவுடர்
தலையில் அழுக்கும், பிசுக்கும் சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகிவிடும். தலை சுத்தமாக இருந்தால் தான் சருமத்தில் கருமை படராது. அதோடு, சருமத்தில் ஓரளவு எண்ணெய்ப் பசை இருப்பதுபோல பார்த்துக் கொள்வதும் அவசியம். இதற்கு சிகைக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூலாங்கிழங்கு, புங்கங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம். வாரம் இருமுறை உச்சி முதல் உள்ளங்கால் வரை எண்ணெய் தேய்த்து, இந்த ஸ்பெஷல் பொடியை போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகிவிடும். தோலின் எண்ணெய்ப் பசை தக்கவைப்ப தோடு, கருமையும் மறைய தொடங்கும்.
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். புருவங்களை சீர்படுத்தி, மினி பேஷியல் செய்து முடியை சீராக வெட்டி வைத்துக் கொள்ள அதிகம் செலவாகாது. மாதமொரு முறை இவற்றைச் செய்து கொள்வது முகத்தின் அழகைப் பாதுகாக்க விரும்பும் வசதி படைத்தவர்கள் கோல்ட் பேஷியல் கினாட் பேஸியல் செய்து கொள்ளலாம்.
மேக் அப் கவனம்
வெயிலும், நெரிசலும் அதிகமாக இருப்பதால் கிரீம் மேக்-அப்பை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. மேக்-அப் செய்வதற்கு முன் வியர்வை அதிகமாக உள்ளவர்கள் ஐஸ் கியூப்-ஐ முகத்தில் தேய்த்து அல்லது செய்த பிறகே மேக்-அப் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஐஸ் கியூப் கொடுக்காமல் மேக்கப் செய்து விட்டால் அவை சிறிது நேரத்துக்குப் பிறகு வியர்த்து விட்டால் சிவப்பு நிற புள்ளிகளாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்க்க பவுடர் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க வேண்டும். அவரவர் நிறத்துக் கேற்றாற் போல் பவுடரை தேர்ந்து எடுக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும். இதில் லிப்ஸ்டிக்கும் அடங்கும்.

21 Feb 2012

இனி சாப்பிடும்போதே உடற்பயிற்சி செய்யலாம்!



நாங்கள் பொதுவாக எமது உடலை தொப்பை இன்றி பேணவும், கட்டுமஸ்தாக வைத்திருக்கவும் நன்றாக சாப்பிட்ட பின் ஜிம்முக்கு செல்வோம். இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆனால் மேலதிகமாக நேரம் வீண் விரயமாக்கப்படும். இப்பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு தற்போது புது வழி ஒன்று பிறந்துள்ளது.


அதாவது நாம் உணவு உண்பதற்கு பயன்படுத்தும் கரண்டி, கத்தி என்பவற்றை உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் "டம்பிள்ஸ்" வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ இரண்டு கிலோகிராம் நிறையுடைய இந்த சாதனங்களால் வேலை கூடுதலாக செய்யப்படுவதுடன் எமது உடலில் தங்கும் மேலதிக கலோரி உணவு எரிக்கப்படுகின்றது. இச்சாதனங்களை 89.99 அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்.



20 Feb 2012

“TEA” சொல்லும் உண்மைகள்


டீ பிரியர்கள் உலகம் முழுமையும் இருக்கிறார்கள். `டீ சாப்பிடுவது நல்லதல்ல, பல்லில் கறைபிடிக்கும், பசியை குறைக்கும் என்றெல்லாம் சொல்வதுண்டு’ இவற்றில் எது உண்மை?…

* டீயில் உள்ள காபின் உடல் நலத்துக்கு நல்லதல்ல.
உண்மை: ஒரு கோப்பை காபியில் இருக்கும் காபினைவிட மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே ஒரு கோப்பை டீயில் காபின் உள்ளது. சரியான அளவில் காபின் எடுத்துக் கொண்டால் அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மன அழுத்தத்தை குறைக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
* டீ குடிப்பதால் பல்லில் கறை ஏற்படும்.
உண்மை: டீயில் நிறைய புளோரைடு உள்ளது. புளோரைடு பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மண்ணில் இருக்கும் ப்ளோரைடை `டீ’ச்செடி உறிஞ்சி எடுத்து தனது இலைகளில் சேமித்து வைக்கிறது. எனவே பற்களுக்கான சத்துக்களை வழங்கும் ஒரு இயற்கை பானமாக டீ இருக்கிறது. பற்களில் `காரை’ படிவதையும் டீ தடுக்கிறது. பல்லை பாதுகாக்க ப்ளோரைடு உள்ள பற்பசையை தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை. டீ குடித்தாலே போதும்.
* டீ குடிப்பது வயிற்றுவலிக்கு காரணமாகும்.
உண்மை: வயிற்றுவலி (அசிடிட்டி) ஏற்பட டீ காரணமாக இருப்பது இல்லை. உண்மையில் கொதிக்கும் தண்ணீரில் கருப்பு டீ போடும்போது அது அல்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாக மாறுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே ஆரோக்கியமான தேநீரைப் பருகுங்கள்.
* டீ எலும்புகளுக்கு கெடுதல் விளைவிக்கும்.

 
உண்மை: டீயில் உள்ள காபின், புளோரைடு போன்ற பொருட்கள் எலும்பை பலவீனப்படுத்துவதாக பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் அண்மைக்கால ஆராய்ச்சிகளில் டீ குடிப்பது எலும்புக்கு நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. வயதான பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஒரு சில ஆய்வுகள் தினந்தோறும் 3 கப் அல்லது அதற்கு அதிகமாக டீ குடிக்கும் பெண்களின் எலும்புகள் டீ குடிக்காத பெண்களின் எலும்புகளை காட்டிலும் நல்ல உறுதியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகமானவர்கள் டீயில் பால் கலந்தே குடிக்கிறார்கள். இதனால் உடலுக்கு தேவைப்படும் கால்சியம் கிடைக்கும். தினந்தோறும் 4 கப் பால் கலந்த டீ குடித்தால் நமது அன்றாட கால்சியம் தேவையில் 21 சதவீதம் கிடைத்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* டீ குடிப்பதனால் இரும்பு சத்து உடலில் சேர்வது குறைகிறது.
உண்மை: இறைச்சி அல்லாத உணவுகளிலிருந்து கிடைக்கும் இரும்பு சத்து உடலில் சேருவதை டீயில் இருக்கும் `ப்ளேவோனாய்ட்ஸ்’ தடுப்பதாக நம்பப்படுகிறது, இருப்பினும் ஆரோக்கியமானவர்கள் உடலில் இரும்பு சத்து சேருவதை டீ தடுப்பதில்லை, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு டீ எந்த கெடுதலையும் ஏற்படுத்தாது. டீ பிரியர்களாக இருந்து இரும்பு சத்து குறைவாக இருப்பவர்களாக இருந்தால் சாப்பாட்டுக்கு இடையே டீயை குடியுங்கள், சாப்பாட்டுக்குப் பின்பு டீயை குடிக்க வேண்டாம்.
* உடலில் தண்ணீர் பற்றாக்குறை எனப்படும் `டிஹைட்ரேஷனை’ தேநீர் ஏற்படுத்தும்,
உண்மை: மூன்று கப் தண்ணீர் குடிக்கும்போது அது உடலில் எந்த அளவுக்கு தண்ணீரின் அளவை பூர்த்தி செய்கிறதோ அதே அளவுதான் மூன்று கப் தேநீர் குடித்தாலும் பூர்த்தியாகிறது. தேநீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அளவை அதிகரிக்கிறது. எனவே உடல் நோய்க் கிருமிகளுக்கு எதிராக போராட தேநீர் உதவுகிறது.
* டீ குடித்தால் உடல் எடை கூடும்
 
உண்மை: டீ குடிப்பதனால் உடல் எடை கூடுவதில்லை. உண்மையில் டீ குடித்தால் உடல் எடை சீராக இருக்கும். பால் மற்றும் சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீயில் கலோரி என்பதே இல்லை.

மேற்கண்டவை, புதிய ஆய்வுத் தகவல்கள். இதுபற்றி இந்துஸ்தான யூனிலிவர் ரிசர்ச் சென்டரின் இயக்குனர் கவுதம் பானர்ஜி கூறுகையில், “மிகச்சிறந்த இயற்கை உணவுப் பொருட்களில் டீயும் ஒன்று. ஆரோக்கியமான பானம் டீ. இதில் இருக்கும் ப்ளேவோனாய்ட்ஸ், கேட்சின்ஸ் மற்றும் தியானைன் போன்ற பல விதமான ஆரோக்கிய பொருட்கள் இதயத்துக்கும், செரிமான உறுப்புகளுக்கும், சருமத்துக்கும் நல்ல சக்தியை அளிக்கின்றன.
உடல் எடை குறைத்தல், மூளை சுறுசுறுப்பு மற்றும் வாய் ஆரோக்கியத்துக்கும் டீ ஏற்றது. டீ, உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் பானமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் 3 முதல் 4 கப் டீ பருகுவது ஆரோக்கியமானது” என்கிறார்.

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்


நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். 
வெள்ளைப் பூண்டு:

பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது. 
வெங்காயம்:

வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன. 
காரட்:

நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் ொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு :

வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் :

பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 
கோதுமை ரொட்டி :

நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இறால் மீன் மற்றும் நண்டு :

அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர் :

தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.

பாலாடைக்கட்டி : 
சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
 
முட்டைக்கோஸ் :
குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.