| வெயில் நேரத்தில் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது கையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். காட்டன் உடைகள் மட்டுமே வெயிலுக்கு ஏற்றவை. குளிர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி கண் எரிச்சலைத் தடுக்கலாம். மூன்று முறை குளிப்பதன் மூலம் வியர்வை நாற்றத்தில் இருந்து விடுபடலாம். மேலும் பகல் 12 மணியில் இருந்து 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே கடுமையாக உழைக்கலாம். எடை குறைந்த மெல்லிய உடையை தளர்வாக அணியலாம். மது மற்றும் தேநீர் குடிப்பதைத் தவிர்க்கலாம். சூடான உணவையும் தவிர்ப்பது நல்லது.
தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் இருந்து தப்பிக்க குடை பயன்படுத்தலாம்.
பெண்கள் வாகனத்தில் செல்லும் போது வெயில்படும் இடங்களை மறைப்பது நல்லது. சன்ஸ்கிரீன் லோஷன் தடவுவதன் மூலம் தோல் கருப்பதைத் தவிர்க்கலாம்.
வியர்வை உற்பத்தியாகும் பகுதியில் பாக்டீரியாக்கள் செயல்புரிவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனைப்படி சோப் மற்றும் லோஷன் உபயோகித்து துர்நாற்றத்தை விரட்டலாம்.
|
12 Mar 2012
வெயில் கால நோய் தொற்றுக் காண பாதுகாப்பு முறை
10 Mar 2012
கர்ப்ப கால குமட்டலை தடுக்க...
கர்ப்பகால குமட்டல் என்பது பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படுகிறது. முதல் முறையாக கர்ப்பிணியாகிறவர்களுக்கு குமட்டல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இந்த குமட்டல் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. அதனால் குமட்டலை எப்படி தவிர்ப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
எவை எல்லாம் குமட்டலை ஏற்படுத்தும்?
குமட்டலை ஏற்படுத்தும் பொருட்கள் கர்ப்பிணிக்கு கர்ப்பிணி மாறுபடும்தன்மை கொண்டது. சிலருக்கு பலாப்பழம் குமட்டலை ஏற்படுத்தும். மல்லிகைப் பூ மணத்தாலும் சிலர் அந்த அவஸ்தையை அனுபவிப்பார்கள். உடலிலோ, அறைகளிலோ பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், பொரித்த-வறுத்த உணவுகள், இனிப்பான பண்டங்கள் ஆகியவைகளும் குமட்டல் ஏற்படச் செய்யலாம்.
குமட்டலை தடுக்க சில வழிமுறைகள்.........
* படுக்கையில் இருந்து அவசரப்படாமல், அதிராமல், ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து கொண்ட பிறகு எழுந்திருக்கவேண்டும்.
* குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறு போன்ற எந்த பானமாக இருந்தாலும் வாயில் வைத்து சிறிது சிறிதாக உறிஞ்சி குடியுங்கள். வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் குமட்டல் உணர்வு இல்லாதது போல் சிலருக்கு தோன்றும். அவர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
* சமையல் வாசனை காரணமாக குமட்டல் ஏற்பட்டால், கைவசம் எப்போதும் தயாராக எலுமிச்சை அல்லது ஆரஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவற்றை முகர்ந்து கொண்டே இருந்தால் குமட்டல் வருவதை தவிர்க்கலாம். இஞ்சி அல்லது கிராம்பை மென்று கொண்டு இருந்தாலும் குமட்டலை தடுக்க முடியும்.
* பாலுக்கு பதில் காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம்.
* காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறில் கொத்துமல்லியை கிள்ளி போட்டு குடித்தால் குமட்டல் வராமல் தவிர்க்கலாம்.
குழந்தை வயிற்றுப் போக்கின் போது கவனிக்க வேண்டியவை
குழந்தை வயிற்றுப் போக்கினால் உடல் நீரை மிகுதியாக இழக்கிறது. உடனே அதை ஈடுசெய்ய வேண்டும். வீட்டில் உள்ள எலுமிச்சை பழச்சாறு, அரிசிக் கஞ்சி, நீர் மோர், இளநீர், குறைவாக சுக்கு போட்ட நீர் முதலியன கொடுக்கலாம். உடன் உப்பு, சர்க்கரை கரைசல் நீரும் கொடுக்கலாம் குழந்தை எந்த பானத்தை விரும்புகிறதோ அதை மிகுதியாக கொடுத்தால் உடல் இழந்த நீரை ஈடு செய்யும்.
உப்பு சாக்கரை கரைசல் நீர் தயாரிப்பதற்கான அளவுகள்.....
உப்பு 4 கிராம்.(ஒரு தேக்கரண்டி தலை தட்டி)
சர்க்கரை 40 கிராம் (8 தேக்கரண்டி தலை தட்டி)
நீர் 1000 மிலி (1 லிட்டர்)- 5 டம்ளர்
சரியாக தூக்கம் வரவில்லையா?
அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வந்துடுது. அதற்கப்புறம் தூக்கமே வரமாட்டேங்குது. சும்மாதான் படுத்திருக்கிறேன்'' "சீக்கிரம் படுத்தாலும் நல்லா தூக்கம் வர பனிரெண்டு மணிக்கு மேலாகுது'' "நல்லா தூங்கி ரொம்ப நாள் ஆகுது'' "எவ்வளவு லேட்டா படுத்தாலும் காலையில கரெக்டா அஞ்சு மணிக்கு மேல தூங்க முடியலை'' இப்படி பலவிதமான புலம்பல்களுடனும், உடல் உபாதையுடனும், உடல் அலைச்சலுடனும், மன உளைச்சலுடனும் உலகில் பாதிப்பேர் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தூக்கம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம், கஷ்டம் நஷ்டம், நன்மை தீமை, சந்தர்ப்பம், சூழ்நிலை இவைகளோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது. அதே மாதிரி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் வருகின்ற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் `இன்ஸாம்னியா' என்று சொல்வதுண்டு.
தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையை கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக் கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம், மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கமின்மையை உண்டுபண்ணும்.
தூக்கத்தை வரவழைக்க பலபேர் பலவிதமாக முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.
மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுவை அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். மது, அது எந்த வகையாக இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்ததானாலும் சரி, ஆரம்பத்தில் அது ஒரு தூக்கத்தை உண்டு பண்ணும் பொருள் தான். ஆனால் மதுவுக்கு அடிமையாகி விட்டால் அது நிம்மதியான தூக்கத்தை தராது.
முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்து விடும் தன்மையுடையது மது. மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்து விடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க வயதானவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்க வழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதாவது லைட்டுகளும், பல்புகளும் கண்டுபிடிக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு செயற்கை வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை என்றாகிவிட்டது.
செயற்கை வெளிச்சங்கள் அதிகமாக வராத காலங்களில், அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள். ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும் பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின்னிரவில் கண்கள் சுற்றும் தூக்கமும் (ஆர்.இ.எம். தூக்கம்) இவர்களுக்கு இருக்கும்.
தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை. இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை பிசியாக வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.
ஆனால் ஓரளவு தான் மூளை ஓய்வு எடுத்துக்கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை ரொம்ப பிசியாகி விடுகிறது. அன்றைய பொழுதிற்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி உடம்பை ரெடியாக மூளை வைத்திருக்கிறது.
விலங்குகள் தூங்கும்போது பாதி மூளை ஓய்வெடுக்கும், பாதி மூளை வேலை பார்க்கும். தூக்கமின்மையை எப்படி சரி செய்யலாம்? அதாவது நன்றாக, நிம்மதியாக, போதுமான அளவு தூங்குவதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? என்பது பற்றி அடுத்தவாரம் பார்ப்போம்.
வழுக்கையிலும் முடி வளரும்!
பெரும்பாலான ஆண்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக தலையில் வழுக்கை ஏற்படுகிறது. வழுக்கை விழுந்தால் அந்த இடத்தில் திரும்பவும் முடி வளராது என்பதுதான் உண்மையே தவிர, முடியே முளைக்காது என்று சொல்ல முடியாது. அதனால், தகுதியான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் வழுக்கை உள்ள இடத்திலும் முடியை வளரச் செய்ய முடியும். என்றாலும், அதில் வளர்ச்சி குறைவாகத்தான் இருக்கும்.
அதற்கு என்ன செய்யலாம்?
* எலுமிச்சம்பழ விதைகளை நல்ல மிளகுடன் சேர்த்து அரைத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்துப் பசைபோல் ஆக்குங்கள். இதனை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை ஒரு சில வாரங்களுக்குத் தேய்த்து வாருங்கள். இப்படிச் செய்வதால் சம்பந்தப்பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளருவதை ஊக்கப்படுத்தும்.
* அதிமதுரத்தைப் பொடித்து, குங்குமப்பூவுடன் சேர்த்து பாலில் கலந்து பசைபோல் ஆக்கவும். இதைத் தூங்கப் போகும்போது வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைத்து விடும். இது, முடி உதிர்வதையும் தடுக்கும். பொடுகையும் போக்கும்.
* ஆலமர விழுது, தாமரை வேர் - இந்த இரண்டையும் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். இந்த இரண்டு பொடியையும் தலா சுமார் 200 கிராம் எடுத்து, அதை 400 கிராம் தேங்காய் எண்ணெயில் சேர்த்து, பொடி கருமை நிறம் அடையும் வரை காய்ச்சி எடுத்து பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெயை வழுக்கை உள்ள இடத்தில் தினசரி ஒன்றிரண்டு தடவை தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வளர ஆரம்பித்து விடும்.