24 Feb 2012

தைரொயிட் சுரப்பியின் தொழிற்பாடும் முக்கியத்துவமும் - அறியவேண்டிய மருத்துவம்.



மனித உடலிலே பல வகையான அகஞ்சுரக்கும் சுரப்பிகள் காணப்பகின்றன. இவை பல்வேஷபட்ட ஓமோன்களைச் சுரக்கின்றன. இந்த ஓமோன்கள் உடலியல் தொழிற்பாடுகளிற்கு மிககவும் இன்றியமையாதவையகும். இந்தவகையில் தைரோயிட் சுரப்பியானது தைரொக்சின் என்ற ஓமோனைச் சுரக்கின்றது. ,ச்சுரப்பியானது கழுத்தின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ளது.

தைரொயிட் சுரப்பியில் எவ்வாறான நோய்கள் ஏற்படலாம்?.
  1. தைரொயிட் சுரப்பியால் சுரக்கப்படுகின்ற தைரொக்சின் ஓமோனின் அளவு அதிகரிக்கலாம். இது HYPERTHYROIDISM என அழைக்கப்படும்.
  2. சுரக்கப்படுகின்ற தைரொக்சின் ஓமோனின் அளவு குறைவடையலாம். இது HYPOTHYROIDISM என அழைக்கப்படும்.
  3. தைரொயிட் சுரப்பியில் கட்டிகள் ஏற்படலாம். இவை தைரொயிட் கட்டிகள் THYROID NODULES என அழைக்கப்படும்.
  4. மேற் கூறப்பட்ட கட்டிகளில் சில மற்றைய பகுதிகளுக்குப் பரவும். புற்றுநோயினை ஒத்திருக்கும். இவை தைரோயிட் புற்றுநோய் THYROID CANCER என அழைக்கப்படும்.
 
மேற் கூறப்பட்ட நோய் வடிவங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறுவிதமான நோய்க் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும்.
 
உடற் தொழிற்பாடு:
 
தைரொயிட் சுரப்பியால் தைரொக்சின் ஓமோன் சுரகக்ப்படுகின்றது. பல் வேறு நோய் நிலைகள் தைரொயிட் சுரப்பியில் ஏற்படலாம். இவற்றின் போது எவ்வாறான பரிசோதனைகளைச் செய்யலாம் என்பலதயும் அவற்றின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதையும் ஆராய்தல் அவசியமானதாகும். இதற்கு முன் தைரொக்சின் ஓமோன் எவ்வாறு சுரக்கப்படுகின்றதென்று அறிந்திருப்பது முக்கியமானதாகும்.
 
தைரொக்சின் எவ்வாறு சுரக்கப்படுகின்றது:
 
  1. காச்சுரப்பியிலிருந்து ( Pituitary gland)  T S H என்ற ஒரு துண்டல் ஓமோன் சுரக்கப்படுகின்றது.  இது தைரொயிட் சுரப்பியினை தூண்டுவதாலேயே தைரொக்சின்  (thyroxine) சுரக்கப்படுகின்றது.
  2. கபச்சுரப்பி ---TSH ----–தைரொயிட் சுரப்பி ----தைரொக்சின்
  3. தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்தால் அது கபச்சுரப்பியில் இருந்து வெளிப்படுகின்ற TSH இன் அளவினை குடைவடையச் செய்கின்றது. அதாவது TSH  வெளியேற்றத்தை  /சுரத்தலை எதிர்க்கிறது. இதனால் TSH இன் அளவு குறைவடைகின்றது இதனாலேயே பெரும்பாலான Hyperthyroidism  நோயாளிகளின் பரிசோதனை முடிவில் தைரொக்சின் அளவு அதிகரித்தும் , TSH  இன் அளவு குறைவடைந்தும் காணப்படும்.
  4. தைரொக்சின் அளவு குருதியில் குறைவடையுமாயின் அதாவத Hypothroidism உள்ளவர்களில் இந்த எதிர்த்தலின் (Negative feed bavk)  அளவு குறைவடைவதால் கபச்சுரப்பியினால் சுரக்கப்படுகின்ற TSH இன் அளவு அதிகரிக்கும்.  இதனாலேயே Hypothyroidism  நோயாளியின் குருதிப்பரிசோதனை முடிவுகளை அவதானிப்பீர்களாக இருந்தால் தைரொக்சின் அளவு குறைவாகவும் ,TSH  அளவு அதிகரித்தும் காணப்படும் (Autontebodies) சுரப்பியினைத் தாக்குவதால் சுரப்பியிலிருநுது வெளியேறுகின்ற ஓமோனின் அளவு கூடலாம். அல்லது குறைவடையலாம். எனவே குருதியில்  Autoantibodies  இனைப் பார்த்தல் /அளத்தல். கொள்ளுதல் சில தைரொயிட் நோய்களை கண்டறிய உதவும்.
தைரொக்சின் ஓமோனின் தொழிற்பாட்டிற்கு ‘அயடின் ‘ என்கின்ற கனியுப்பு அத்தியவசியமாகும். இதனாலேயே அயடீன் உட்கொள்ளும் அளவு குறைவானவர்களில் Hypothyrodism  அதாவது குருதியில் தைரொக்சின் அளவு குறைவடைந்து தைரொயிட் சுரப்பி வீக்கமடைகின்றது.
 
இதனாலேயே பாவனையிலுள்ள உப்பு அயடின் கலந்த உப்பாக காணப்படுகின்றது. இதன் மூலம் தைரொயிட் நோய்களின் அளவு ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. அயடீன் கலந்த உப்பினை நீரில் கழுவாமல் நேரடியாக உணவிற்குள் சேர்க்கவேண்டும். ஏனெனில் உப்பினைக் கழுவுவதனால் அத்துடன் காணப்படும் அயடீன் வெளியேற்றப்படுகின்றது.
 
--- kingdomofklk ---

0 comments:

Post a Comment