10 Mar 2012

கர்ப்ப கால குமட்டலை தடுக்க...


கர்ப்ப கால குமட்டலை தடுக்க...

 
கர்ப்பகால குமட்டல் என்பது பெரும்பாலும் கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படுகிறது. முதல் முறையாக கர்ப்பிணியாகிறவர்களுக்கு குமட்டல் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இந்த குமட்டல் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சம் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. அதனால் குமட்டலை எப்படி தவிர்ப்பது என்று சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
 
எவை எல்லாம் குமட்டலை ஏற்படுத்தும்?
 
குமட்டலை ஏற்படுத்தும் பொருட்கள் கர்ப்பிணிக்கு கர்ப்பிணி மாறுபடும்தன்மை கொண்டது. சிலருக்கு பலாப்பழம் குமட்டலை ஏற்படுத்தும். மல்லிகைப் பூ மணத்தாலும் சிலர் அந்த அவஸ்தையை அனுபவிப்பார்கள். உடலிலோ, அறைகளிலோ பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், பொரித்த-வறுத்த உணவுகள், இனிப்பான பண்டங்கள் ஆகியவைகளும் குமட்டல் ஏற்படச் செய்யலாம்.
 
குமட்டலை தடுக்க சில வழிமுறைகள்.........
 
* படுக்கையில் இருந்து அவசரப்படாமல், அதிராமல், ஒரு பக்கமாக ஒருக்களித்து படுத்து கொண்ட பிறகு எழுந்திருக்கவேண்டும்.
 
* குளிர்ந்த தண்ணீர், எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாறு போன்ற எந்த பானமாக இருந்தாலும் வாயில் வைத்து சிறிது சிறிதாக உறிஞ்சி குடியுங்கள். வெதுவெதுப்பான தண்ணீர் பருகினால் குமட்டல் உணர்வு இல்லாதது போல் சிலருக்கு தோன்றும். அவர்கள் அதனை கொஞ்சம் கொஞ்சமாக பருகலாம்.
 
* சமையல் வாசனை காரணமாக குமட்டல் ஏற்பட்டால், கைவசம் எப்போதும் தயாராக எலுமிச்சை அல்லது ஆரஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து இவற்றை முகர்ந்து கொண்டே இருந்தால் குமட்டல் வருவதை தவிர்க்கலாம். இஞ்சி அல்லது கிராம்பை மென்று கொண்டு இருந்தாலும் குமட்டலை தடுக்க முடியும்.
 
* பாலுக்கு பதில் காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம்.
 
* காலை நேரத்தில் எலுமிச்சை பழச்சாறில் கொத்துமல்லியை கிள்ளி போட்டு குடித்தால் குமட்டல் வராமல் தவிர்க்கலாம்.

0 comments:

Post a Comment